தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், போக்குவரத்து துறை முதன்மை செயலராக சுன்சோங்கம் ஜடக் சிரு, நிதித் துறை செலவின பிரிவு செயலராக பிரசாந்த் மு.வடநெரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜகோபால் சுன்கரா, தீபக் ஜேக்கப், கவிதா ராமு, இரா.கஜலட்சுமி, க.வீ.முரளிதரன், கிரண் குராலா, கீ.சு.சமீரன், தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வெ.ச.நாராயணசர்மா ஆகியோருக்கும் புதிய பொறுப்புகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.