``தமிழ்நாடு அரசுக்கு 10 லட்சம் அபராதம்’’ - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அரசுக்கு 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் அபராதம் விதுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே துறையில், வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்ததாக 2015 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீகாந்தன், பிரபாகரன், தீபன், பழனி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், பத்து ஆண்டுகள் கடந்தும், வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.