கேரம் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற ஆட்டோ டிரைவர் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

Update: 2024-12-24 02:30 GMT

அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சார்பில் இரண்டு தங்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள் மித்ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மணிநகரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயபாஸ்கர் - அனிதா தம்பதியரின் மகள் மித்ரா தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றதற்காக தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்தது. மேலும், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளும், மித்ராவை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்