ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44வது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் (shreyas iyer )தலைமையிலான பஞ்சாப் அணியும், அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane )தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை அதிகரிக்க இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் நிலையில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.