RCBயின் ப்ளூபிரிண்ட்டை கையில் எடுத்து அடுத்த 6 போட்டியின் பிளானை அறிவித்த CSK - இனிதான் ரியல் கம்பேக்கா?
தொடர் தோல்வியில தத்தளிச்சிட்டு இருக்க சிஎஸ்கே, தொடர்ல நீடிக்க வெற்றி அவசியமாகியிருக்கு.
சேப்பாக்கத்துல வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்க சிஎஸ்கே செம்ம பிராக்டீஸ்ல இருக்காங்க. குறிப்பா, முதல் போட்டியில கவனம் ஈர்த்த ஆயுஷ் மாத்ரே, பிராக்டீஸ்ல பந்தை பறக்கவிடுறதா சிஎஸ்கே வீடியோ ஷேர் பண்ணியிருக்கு.
மேட்ச் பத்தி பேசியிருக்க, சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் STEPHEN FLEMING, 6 போட்டியில 6லும் ஜெயிக்க உறுதியா இருக்குறதாவும், இதுக்கான BLUEPRINT RCB போன வருஷம் கொடுத்திருக்குறதாவும் சொன்னாரு.
பெஸ்ட் 11-ஆ களமிறக்க தயாரா இருக்குறதா சொல்லியிருக்க பிளமிங், லேட்டஸ்ட்டா டீம்ல இணைஞ்ச டெவால்டு பிரவீஸ் பெயரை OPTIONல வச்சிருக்குறதாவும் சொல்லியிருக்காரு.
இதுக்கிடையே மிடில் ஆர்டர் ரன் அடிக்க திணறாங்களேனு செய்தியாளர் கேள்வி எழுப்ப, டாப் ஆர்டரும்தான்னு விரக்தியில் பதில் சொன்னாரு பிளமிங்..