ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2-இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. இதனால் தரவரிசையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9ம் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. வரும் ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு என்ற நெருக்கடியான நிலையில், இன்று இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.