Champions League | Football | PSG | முதல் முறை சாம்பியன்ஸ் லீக் வென்று சாதித்த பிஎஸ்ஜி
கால்பந்து உலகமே ஆவலோடு எதிர்பார்த்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி ஜெர்மனி முனிச் நகர்ல இருக்க ALLIANZ ARENAல நடந்தது.
இன்டர்மிலன் கிளப் டீமுக்கு எதிரா நடந்த இறுதிப்போட்டியில, தொடக்கத்துல இருந்தே PSG ஆதிக்கம்தான்.
12வது நிமிசத்துல அஷ்ரஃப் ஹக்கிமி ASHRAF HAKKIMI கோல் அடிச்சி அசத்துனாரு.
உடனே 20வது நிமிசத்துல பிஎஸ்ஜி வீரர் டிசிரே டூவே DESIRE DOUE கோல் அடிக்க முதல் பாதியில பிஎஸ்ஜி 2க்கு பூஜியம்னு லீட் வச்சது.
ரெண்டாவது பாதியிலும் பிஎஸ்ஜி ஆதிக்கம்தான்.. 63, 73, 86னு அடுத்தடுத்து 3 கோல் அடிக்க, மறுபக்கம் இன்டர்மிலன் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியல.
இறுதியா 5க்கு பூஜியம் என்ற கோல் கணக்குல WIN பண்ண PSG, வரலாற்றுல முதன்முறையா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று அசத்திடுச்சி..
முதல்முறை கோப்பை வென்ற மகிழ்ச்சியில பிஎஸ்ஜி வீரர்கள், ஃபேன்ஸ் செம்ம கொண்டாட்டம்.
இதுஒருபக்கம்னா, 2023ல பிஎஸ்ஜி மேனேஜரா பதவியேற்ற லூயிஸ் என்ரிகே Luis Enrique, 2 வருசத்துல கோப்பைய வாங்க வச்சிட்டாரு. குறிப்பா நட்சத்திர வீரர் எம்பாப்வே Mbappe பிஎஸ்ஜில இருந்து விலகுன ஒரு வருசத்துல, இப்படி ஒரு வரலாற்று சாதனையை படைப்பதற்கு முக்கிய காரணமா ஜொலிக்கிறாரு என்ரிகே.
சமீபத்துல புற்றுநோயால என்ரிகோவோட மகள் உயிரிழந்தாங்க.. இந்த கோப்பையை எங்கையாவது இருந்து என் குழந்தை ரசிப்பானு என்ரிகே நெகிழ்ந்தாரு.
பிஎஸ்ஜி ரசிகர்கள் ஒருபடி மேலே போய், என்ரிகேவுக்கும், குழந்தைக்கும் பிஎஸ்ஜி ரசிகர்கள் அன்போட ஒரு TRIBUTE கொடுத்தது பல கோடி ரசிகர்களை நெகிழ வச்சிருக்கு.