IPL வரலாற்றில் மைல் கல்.. மைதானத்தில் புயலாக சுழன்ற அபிஷேக்..

Update: 2025-04-13 03:14 GMT

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து, 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச சேஸிங்காகவும் இது அமைந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்