ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி எம்.பியுடன் நிச்சயதார்த்தம்

Update: 2025-06-08 16:42 GMT

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும் சமாஜ்வாதி எம்.பி பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் ரிங்கு சிங், பிரியா சரோஜை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், லக்னோவில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள், அரசியல் மற்றும் கிரிக்கெட் சங்க தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். வருகிற நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்