நேபாளத்தில் வெடித்துள்ள போராட்டத்திற்கு மத்தியில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள டில்லிபசார் சிறையில் இருந்து பலர் தப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைகளிலிருந்து கைதிகள் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய சிறையை சுற்றி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.