`ஆமாம்! மிரட்டல் தான்..'' அதிமுக-பாஜக கூட்டணி - முரசொலி கடும் விமர்சனம்

Update: 2025-05-08 12:09 GMT

அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆமாம்! மிரட்டல்தான்! என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில்,

‘2026 ஆம் ஆண்டு மட்­டு­மல்ல, 2031 ஆம் ஆண்­டும் பா.ஜ.க.வுடன் கூட்­டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும், இத்­த­கைய சூழ­லில் தான் பழ­னி­சா­மி­யின் உற­வி­னர்­க­ளுக்­குச் சொந்­த­மான 26 இடங்­க­ளில் ரெய்டு நடந்­ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த எடப்­பா­டி­யின் உற­வி­னர் என்று செய்திகள் வெளியான நிலையில், பழ­னி­சாமி, மீண்­டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததாகவும்,

அவர் மிரட்­டப்­பட்­டது அம்­ப­லம் ஆனதாகவும் முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்­தியா­வி­லேயே தமி­ழ­கத்­தில்­தான் அதி­கம் ஊழல் நடக்­கி­றது என்று பழனி­சாமி முத­ல­மைச்­ச­ராக இருந்தபோது சொன்னவர் அமித்ஷா....இன்று அவர் எப்­படி பழ­னி­சா­மி­யு­டன் கைகோர்த்­தார்?... பா.ஜ.க. தனி­யாக நின்­றால் டெபாசிட் கூட கிடைக்­காது என்பதை அமித்ஷா அறி­வார்... தன்­னைக் காக்க பழனி­சா­மி­யும், தனது கட்­சியைக் காக்க அமித்­ஷா­வும் அமைத்­துள்ள சுய­நல – ஊழல் கூட்­ட­ணி­தான் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்­டணி என்றும் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்