தமிழக முதல்வர் முதல் நடிகர் விஜய் மகன் வரை... ஜி.கே.மணி இல்ல திருமண விழாவின் ஹைலைட் வீடியோ
சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி இல்ல திருமண விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முதலமைச்சர் ஸ்டாலின், ஓபிஎஸ், ஜி.கே.வாசன், முத்தரசன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திருமண விழாவில் பங்கேற்றனர்.இதே போல் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர்கள் விஜய் சேதுபதி, சந்தானம், சூரி, சசிக்குமார், இயக்குனர்கள் பாண்டியராஜ், சேரன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்தனர்..