எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைக் கண்டு முதல்வர் ஸ்டாலின் அஞ்சுகிறார் என்று, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்காக நிபந்தனைகளை கூறும் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இடையே ஒற்றைக் கருத்து உள்ளதா என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்தார். எதிரணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து விடுவார்களோ என்ற கவலையில் முதல்வர் இருப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.