முதல்முறையாக திமுகவை நேரடி அட்டாக் செய்த விஜய்க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து வந்த வாழ்த்து
திமுகவை நேரடியாக தாக்கி பேசிய விஜயை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் தினத்தில் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்து பேசியதை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், 6 மாதம் வரை கூட்டணி குறித்து கேள்வி கேட்க வேண்டாம் எனவும் செய்தியாளர்களுக்கு கோரிக்கை வைத்தார்.