"அனுமதியின்றி ரோடு ஷோ" - தவெகவினர் தடுத்து நிறுத்தம்
புதுக்கோட்டையில் அனுமதியின்றி ரோடு ஷோ போன்று வாகனங்களில் அணிவகுத்து சென்றதாகக் கூறி தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக சார்பில் புதுக்கோட்டையில் சாலையோர வியாபாரிகளுக்கு பெரிய குடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ரோடு ஷோ போன்று நடத்தியதாக கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் வாகனத்தை விடுவித்தனர்.