TVK Rally Stampede | விஜய் கரூர் செல்வது எப்போது..? TVKல் இருந்து வந்த தகவல்
காவல் துறை அனுமதி கொடுத்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு தவெக தலைவர் விஜய் கரூர் செல்வார் என்று அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் கூறியுள்ளார். கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, விஜய் பங்கேற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், தவெக பொருளாளர் வெங்கட்ராமனுடன் நீலாங்கரையில் உள்ள வீட்டில் விஜய் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு வெங்கட்ராமனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, போலீசார் அனுமதி அளித்த பிறகு விஜய் கரூர் செல்வார் என்று பதில் அளித்தார்.