Madurai | Tvk | Police | N.ஆனந்த் உத்தரவை மீறி உள்ளே வந்த தவெகவினர் - மதுரை DSP ஆபீசில் பரபரப்பு
Madurai | Tvk | Police | N.ஆனந்த் உத்தரவை மீறி உள்ளே வந்த தவெகவினர் - மதுரை DSP ஆபீசில் பரபரப்பு
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தவெக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து அனுமதி வாங்க, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது கண்காணிப்பாளர் அறை உள்ளே யாரும் வர வேண்டாம் என அவர் உத்தரவிட்டும், அதனை சற்றும் கண்டுக் கொள்ளாத தவெக-வினர் அறை முன்பு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் திரும்பி செல்லும் போது என்.ஆனந்தை பின் தொடர்ந்த தவெக-வினர், அங்கிருந்த எஸ்பி காரில் இடித்து பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அதனை தெரியாமல் மறைத்து அப்புறப்படுத்தினர். இதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.