TVK Madurai Manaadu | மதுரையில் பிரமாண்டம் காட்ட தவெகவின் முக்கிய முடிவு - ரெடியான `டீம் 5’
த.வெ.க மதுரை மாநாடு - ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, பல்வேறு ஒருங்கிணைப்பு குழுக்களை அக்கட்சி அறிவித்துள்ளது. தவெகவின் 2-ஆவது மாநாடு வரும் 21-ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், மாநாடு தலைமை ஒருங்கிணைப்புக் குழு, தீர்மானக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு என 5 முக்கிய குழுக்கள் இடம்பெற்றுள்ளன. தலைமை ஒருங்கிணைப்புக் குழு தலைவராக தவெக பொதுச் செயலர் ஆனந்த் நியமிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.