Trichy News | திமுக கவுன்சிலர் துப்பாக்கியை திருடிய இருவரை தூக்கிய போலீஸ்
திருச்சியில் திமுக கவுன்சிலரின் கை துப்பாக்கியை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நகராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர் சங்கரின் கை துப்பாக்கி காணாமல் போனது. போலீசார் விசாரணையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் கிருஷ்ணன் மற்றும் நாராயணன் சவுத்ரி துப்பாக்கியை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.