"மத்திய அமைச்சர் சொன்ன பதில்.. இதுவே எங்கள ஆதரிச்சி தான் இருக்கு" -MP வில்சன்

Update: 2025-07-29 08:41 GMT

தொகுதி மறுவரையறை -"மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும்"

தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் என்பதை மத்திய சட்ட அமைச்சர் ஒப்புகொண்டிருப்பதாக திமுக எம்.பி வில்சன் விமர்சித்துள்ளார். திமுக எம்.பி வில்சனின் உரைக்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கடிதம் மூலம் பதிலளித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும் எனவும், தற்போது புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில், தொகுதி மறுவரையறையின் விளைவை ஊகிப்பது பொருத்தமானதாக இருக்காது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். மத்திய சட்டத்துறை அமைச்சரின் இந்த பதில் தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளை ஆதரிப்பதாக திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார். 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், 2026 வரை தற்போது உள்ள நிலை இயற்கையாகவே முடிவுக்கு வரும் என கூறியுள்ளார். இது தொகுதி மறுவரைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், இதன் விளைவாக, மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்