Nainar Nagendran | BJP | ``சாக்கடைகளை திரைச்சீலை வைத்து மூடுவதுதான்..'' நயினார் நாகேந்திரன் ஆவேசம்

Update: 2025-06-02 07:05 GMT

மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சரின் வாடிக்கையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள பாஜக மூத்த நிர்வாகி ஜோதீஸ்வரி கந்தசாமியின் வீட்டிக்கு நயினார் நாகேந்திரனும், மகாராஷ்டிர மாநில ஆளுர் சி.பி.ராதாகிருஷ்ணனும் மரியாதை நிமித்தமாக வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன்,

சாக்கடைகளை திரைச்சீலை வைத்து மூடுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்தார். மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சரின் வாடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்