``சில விஷமிகள் பரப்புவதை நம்ப வேண்டாம்; எல்லாமே வதந்தி’’ ராமதாஸ் விளக்கம்

Update: 2025-08-17 03:29 GMT

"திட்டமிட்டபடி பாமக சிறப்பு பொதுக் குழு நடைபெறும்"

பாமக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் குழு கூட்டம், திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாமக சிறப்பு பொதுக் குழு, ஞாயிறு காலை புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்தார். சில விஷமிகள் பொதுக் குழு ரத்து செய்யப்படுவதாக வதந்தி பரப்புவதால், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்