``மிகப்பெரிய நாடுகளுக்கு சவால் விடும் வகையில் முன்னேறிய தமிழகம்'' - அமைச்சர் மா.சு சொன்ன தகவல்
இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் கடந்து முதன்மையான மருத்துவ கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில், தனது துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கி பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளின் எண்ணிக்கை 56 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மருத்துவ கட்டமைப்பில் பல்வேறு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தமிழகம் முன்னேறி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.