மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஊழலை மறைக்க முயற்சிக்காமல், தமிழக அரசு சிபிஐ விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.