மதுரைக்கு மெட்ரோ ரயில் கிடைப்பதை திமுகதான் தடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், மெட்ரோ விவகாரத்தில் திமுகவினர் முறையான திட்ட அறிக்கை தயாரிக்கவில்லை என்றும், எம்.பி. சு. வெங்கடேசனை இதில் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.