``இனி சீமானை எதிர்த்து போராட போவதில்லை'' -நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ | SEEMAN | ACTRESS | VIDEO

Update: 2025-03-04 09:05 GMT

நடிகை பாலியல் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் சீமானுக்கு ஆதரவாக உத்தரவு வந்துள்ள நிலையில், இனி தான் போராடப் போவதில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக காவல் துறை தரப்பு, வாதங்களை வைத்தது போல், உச்சநீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து தன்னை அசிங்கப்படுத்துவதால் இனி போராடப்போவதில்லை என்றும், இதுவரை தனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்