Ranipet | உடல் நலம் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்த எஸ்.எம்.சுகுமார்

Update: 2025-08-07 05:08 GMT

Ranipet | உடல் நலம் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்த எஸ்.எம்.சுகுமார்

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் கட்டியவாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அதிமுக

மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளராக உள்ளார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வரும் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுக மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளரான ரவிக்குமார் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து, ரவிக்குமாரின் மருத்துவ செலவிற்கு உதவிடும் விதமாக எஸ்.எம்.சுகுமார், 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இத்துடன் மருத்துவர்களிடமும் ரவிக்குமாருக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்