மூத்த மகள்’ காந்திமதியை மேடையேற்றிய ராமதாஸ் - செயற்குழுவுக்கு எதிராக அன்புமணி எடுத்த முடிவு

Update: 2025-07-09 04:05 GMT

பாமக செயற்குழுவில் பங்கேற்ற ராமதாஸ் மூத்த மகள் காந்திமதி - பசுமை தாயகத்தில் பொறுப்பு?

பாமக செயற்குழு கூட்டத்தில் திடீரென பங்கேற்ற மருத்துவர் ராமதாசின் மூத்தமகள் ஸ்ரீ காந்திமதி மேடையில் அமரவைக்கபட்ட சம்பவம் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தூரில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி மேடைக்கு அருகே அமர்ந்தார். இதனையடுத்து காந்திமதியை ராமதாஸ் மேடையில் அமர கூறியதால் மேடையில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் பசுமை தாயகத்தில் காந்திமதிக்கு பொறுப்பு வழங்கபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்