Puducherry |Jose Charles Martin |``புதுச்சேரி அரசே பொறுப்பு..''ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு ஆளும் அரசுதான் பொறுப்பு என்று, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன் தனது கட்சி சார்பில் மகளிர்களுக்கான வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, தாம் வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினால், மகளிர் மட்டுமன்றி, இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
பாஜகவில் உரிய அங்கீகாரம் இல்லாததால்தான் தனிக் கட்சி தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெகவுடன் கூட்டணி அமைக்க தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அவர்கள் விரும்பினால் கூட்டணி அமையும் என்றும், ஆனால் விஜய் உடன் இருப்பவர்கள் அவரை குழப்பத்திலேயே வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.