Puducherry CM Birthday | புதுச்சேரி CM பிறந்தநாளை மேள தாளங்கள் முழங்க கொண்டாடிய முன்னாள் சபாநாயகர்

Update: 2025-08-05 04:56 GMT

Puducherry CM Birthday | புதுச்சேரி CM பிறந்தநாளை மேள தாளங்கள் முழங்க பிரமாண்டமாய் கொண்டாடிய முன்னாள் சபாநாயகர்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பிரமாண்டமாக கொண்டாடினர்.

முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் விழா, புதுச்சேரி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, லாஸ்பேட்டை தொகுதி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ் முன்னிலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்டோ மற்றும் பைக்குகளில், முதல்வர் ரங்கசாமியின் இல்லத்திற்கு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். அங்கு ரங்கசாமியை சந்தித்து இருவரும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் ஆசி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்