பாம்பன் பால திறப்பு விழாவிற்காக வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, நண்பகல் 12 மணி அளவில் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர், ஒரு ரயில் மற்றும் கப்பலைக் கொடியசைத்து தொடங்கி வைத்து, பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 12.45 மணி அளவில் ராமநாதசுவாமி கோயிலில் பூஜை செய்கிறார். பின்னர் 1.30 மணி அளவில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் ராமேஸ்வரம் - தாம்பரம் ரயில்சேவையையும் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.