Premalatha Vijayakanth | Metro | கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மெட்ரோ ரயில் திட்டம் கோவை மற்றும் மதுரை போன்ற மாநகராட்சிக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த்திடம், செய்தியாளர்கள் SIR குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வாக்கு திருட்டு எங்கும் நடைபெறக்கூடாது என்றும் ஜனநாயக நாட்டில் ஒவ்வொருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு எனவும் அவர் பதிலளித்தார்.