திமுக அமைச்சர் ஆர்.காந்தி, உட்கட்சி விவகாரம் பற்றி மறைமுகமாக சாடியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட, ஆற்காடு - ஆரணி பைபாஸ் சாலையின் சேவையை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். அப்போது தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட அமைச்சர், கட்சிக்குள் நேற்று வந்தவர்களுக்கெல்லாம் பதவி தருவதாக திமுகவின் உட்கட்சி விவகாரத்தை மறைமுகமாக சாடினார்.