PM Modi News | Modi | "இந்தியாவில் வறுமையை வென்ற 250 மில்லியன் மக்கள்" - பிரதமர் மோடி
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 250 மில்லியன் மக்கள் வறுமையை வென்று உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய பால் விநியோகத்தில் இந்தியா 25 சதவீதம் பங்களிப்பதாகவும், கூடுதலாக தினை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறினார்.
அரிசி மற்றும் கோதுமையைப் பொறுத்தவரை, நாடு உலகின் 2வது பெரிய உற்பத்தியாளராக உள்ளதாக கூறிய அவர்... வசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் மற்றும் நமது அரசாங்கத்தின் கொள்கைகளின் கடின உழைப்பால் இந்தியாவின் வலிமை தொடர்ந்து வளர்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளதாக கூறிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பதப்படுத்தும் திறன் 20 மடங்கு அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.