NTK Arrest | நாதகவினர் அதிரடியாக கைது
'கிங்டம்' திரைப்படம் ஓடிய தியேட்டர் முற்றுகை - 10 நாதகவினர் கைது
கோவையில் தியேட்டரில் வெளியான 'கிங்டம்' திரைப்படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள தியேட்டரில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர், அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 10 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும் நாதகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.