நிதி ஆயோக் கூட்டம் - நடந்தது என்ன...?

Update: 2025-05-24 15:23 GMT

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014 ஆம் ஆண்டு திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 10 ஆவது நிதி ஆயோக் கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. விக்சித் பாரத் 2047 என்ற கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதை மையமாக கொண்டு பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்