ஏ.ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் போலி வீடியோவை நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் 33 லட்ச ரூபாயை காங்கிரஸ் நிர்வாகி இழந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குன்னூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்ற போலி வீடியோவை நம்பி குறிப்பிட்ட போலி நிறுவனத்தில், சிறிது சிறிதாக சுமார் 33 லட்சம் வரை அமெரிக்க டாலரில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், கூடுதல் லாபப்பணத்தை, குறிப்பிட்ட வர்த்தக செயலியில் இருந்து தனது கணக்கிற்கு மாற்ற முயற்சித்த போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காங்கிரஸ் நிர்வாகி, இதுகுறித்து புகாரளித்தார். விசாரணையில் வங்கிக்கணக்குகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருப்பது தெரிய வந்த நிலையில், அதிலிருந்த 15 லட்ச ரூபாயை போலீசார் முடக்கி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.