New GST Changes | PM Modi | BJP | ஜிஎஸ்டி சீர்திருத்தம் - பிரதமர் மோடி பேச்சு
ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலன்கள் சாமானிய மக்களை சென்றடைவதை உறுதி செய்வது ஒவ்வொரு பாஜகவினரின் பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி மாநில பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர், பாஜக அலுவலகங்கள் மக்களுடன் கட்சியை இணைக்கும் புனித தளங்களாகும் என்றார்.வருமான வரி வரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக கூறினார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொதுமக்களின் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சாதாரண குடிமக்களுக்கு நேரடியாக பயனளிப்பதை பாஜகவினர் உறுதி செய்ய வேண்டும் என கூறினார். ஜிஎஸ்டி நன்மைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். சுதேசி பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க கடைகளில் "இது சுதேசி" எனும் பலகையை வைக்க பாஜக தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.