Nainar Nagendran | BJP | TN Fact Check Team | ``அது Fake’’ - உண்மையை உடைத்த TN Fact Check டீம்

Update: 2025-07-03 04:14 GMT

பாஜக நிர்வாகி கைது ஏன்? - உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை விமர்சித்ததற்காக பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்கக்குறிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் - திருவாலங்காடு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவத்தில் இஸ்லாமியர்கள் பங்கு வகித்ததாக பிரவீன் ராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்படி வலைத்தளத்தில் தவறான தகவல்களை பகிர்ந்து, பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பதிவிட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்