சாஷ்டாங்கமாக விழுந்து மனமுருகி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சப்தவிடங்களுள் ஒன்றான பிரசித்தி பெற்ற நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அம்மன் சிலை முன்பு அமர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்த அவர், கொடிமர நமஸ்கார பீடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வேண்டிக்கொண்டார்.