காணாமல் போன இளைஞரின் பைக் - விஷயம் தெரிந்ததும் ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2025-09-03 06:26 GMT

பீகாரில், யாத்திரையில் பைக் தொலைத்த இளைஞருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சார்பில், புதிய பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ராகுல் காந்தி, பீகார் மாநிலம் தர்பங்காவில், கடந்த மாதம் 24-ம் தேதி தனது யாத்திரையின் ஒரு பகுதியாக பைக் பேரணியில் பங்கேற்றார். இதில் கலந்து கொண்ட சுபம் சௌரப் என்ற இளைஞர், ராகுல் காந்தி உடன் வந்த நபருக்கு தனது பைக்கை பேரணியில் பங்கேற்பதற்காக கொடுத்துள்ளார். ஆனால் சுபம் செளரபின் பைக் காணாமல் போனது. இதனால் அவர் கவலை அடைந்த நிலையில், அதுகுறித்த தகவல் அறிந்த ராகுல் காந்தி, அவருக்கு புதிய பைக் வாங்கித் தர ஏற்பாடு செய்தார். அதன்படி, அந்த இளைஞரிடம் புதிய பைக்கிற்கான சாவியை கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இதனால் அந்த இளைஞர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தா​ர்.

Tags:    

மேலும் செய்திகள்