அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல பாஜக கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்த அவரது எக்ஸ் பதிவில், இரண்டு ரைடுகளுக்கு அரண்டு போய், தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் துரோகி அதிமுக, விரோதி பாஜக சேர்ந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.