பறிக்கப்பட்ட பதவி - முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விளக்கம் கொடுத்த பொன்முடி

Update: 2025-04-12 03:31 GMT

திமுக துணை பொது செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து நேரில் விளக்கம் அளித்தார். ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சில கருத்துக்களை முன்வைத்தது சர்ச்சையான நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்