மதுரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் காமெடி நடிகர் மதுரை முத்து MGR பாடலைப் பாடி அசத்தினார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள T.குன்னத்தூர் பகுதியில் ஈபிஎஸ் உரையாற்றினார். இந்த நிகழ்வுக்கு முன்பாக அங்கு நடந்த இசைக் கச்சேரியில் மதுரை முத்து MGR பாடலைப் பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.