M. Karunanidhi | CM Stalin | Dmk | கருணாநிதி நினைவு நாள் - இன்று `திமுக அமைதி பேரணி'
M. Karunanidhi | CM Stalin | Dmk | கருணாநிதி நினைவு நாள் - இன்று `திமுக அமைதி பேரணி'
சென்னையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் 'திமுக அமைதி பேரணி' நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி நடக்க உள்ள இந்த பேரணி அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை பகுதியில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை நடைபெற உள்ளது. இறுதியாக, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.