Lighter Banned | TN Govt | "லைட்டர் விற்பனைக்கு தடை" | தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
தென்மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில், பாதிக்கப்பட்டுள்ளதால் லைட்டர் விற்பனையை தடை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அவர், லைட்டர் விற்பனையை தடை செய்வது குறித்து, அரசு பரிசீலனையில் உள்ளதாகவும், இதனை தடை செய்ய சுற்றுச்சூழல் துறை பரிந்துரைத்துள்ள நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.