L Murugan On Karur Judgement | "திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி" - L முருகன் காட்டம்
"திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி" - L முருகன் காட்டம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தளத்தில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியதாக கூறினார்.
இந்த கூட்டத்திற்கு அனுமதி, இடம் தேர்வு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் காவல்துறை பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாத திமுக அரசு, தவெகவுக்கு எதிராக வன்ம பிரசாரமும் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
எனவே, திமுக அரசின் விசாரணையில் நியாயம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்ததாக கூறினார்.
இந்த வழக்கை, சிபிஐக்கு மாற்றி திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.