"கச்சத்தீவு விவகாரம்- நாடாளுமன்றம் ஒப்புதல் இல்லாமல் நடந்தது" - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி
கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட விவகாரம், இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் நடந்தது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கச்சத்தீவு விவகாரம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சர்கள் கையெழுத்திடாமல் இரு அதிகாரிகள் மட்டுமே கையெழுத்திட்டனர் என்றும் தெரிவித்தார்.