Josh Charles Martin| ``ஊழலை ஒழித்து புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றுவேன்'' - ஜோஸ் சார்லஸ்

Update: 2025-12-15 06:55 GMT

புதுச்சேரி மாநிலத்தில் ஊழலை ஒழித்து சிங்கப்பூராக மாற்றுவதற்காவே லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி உள்ளதாக அக்கட்சியின் தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜேசிஎம் என்ற பெயரில் மக்கள் மன்றம் தொடங்கி மக்களுக்கான பல நலத்திட்டங்களை வழங்கி வந்த சூழலில், புதுச்சேரியில், 'லட்சிய ஜனநாயக கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதற்கான விழாவில், மும்மத பூஜைகளுடன் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் கட்சியின் முதல் எழுத்துக்களான LJK என்ற வடிவில் தொண்டர்கள் அணிவகுத்தனர். பின்னர் படகுகள் புடைசூழ துறைமுகம் வழியாக விழா நடைபெறும் பாண்டி மெரீனாவுக்கு வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லட்சிய ஜனநாயக கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மேடையில் நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள் நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட அக்கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உயிரைக் காக்கும் மருத்தில் கூட ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். மேலும், ஊழலை ஒழித்து சிங்கப்பூர், டென்மார்க் போன்று புதுச்சேரியை மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்