"அமித்ஷா கட்டளைப்படி தவெக இயங்குகிறது" - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

Update: 2025-05-16 02:53 GMT

நடிகர் விஜய் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தனியார் நிறுவனம் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக, சட்டசபைத் தலைவர் அப்பாவு, பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற, பொதிகை தமிழ் சங்கம் சார்பில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், த.வெ.க அமித்ஷாவின் கட்டளைப்படி இயங்குவதாக மறைமுகமாக சாடினார். மேலும், விஜய்க்கு மத்திய அரசு தனியார் நிறுவனம் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதில் நடிகை த்ரிஷாவும் பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்